ஃபாலுன் கோங் (தமிழ்)
ஃபாலுன் கோங் என்றும் ஃபாலுன் தாஃபா என்றும் அறியப் படும் ஆன்மீக பயிற்சி, உடலையும் உள்ளத்தையும் ஒருங்கே பண்படுத்தும் உன்னதமான தியானப் பயிற்சி.
இப்பயிற்சியின் அடிப்படை தத்துவங்களை சுருக்கமாக அறிமுகப் படுத்தும் புத்தகம் இது.
இந்த பயிற்சியை நிறுவியுள்ள மகான் லீ ஹோங்ஜு , இந்த அறிமுக புத்தகத்தில் உடற்பயிற்சிகளையும் விளக்கியுள்ளார். பயிற்சியை தொடங்குபவர்களுக்கு மிகுந்த பயனுள்ள புத்தகம் இது.
விளக்கம்:
ஃபாலுன் கோங் என்னும் இந்த அறிமுக புத்தகம், இந்த சாதனைமுறையைத் தொடங்குவதற்கு ஏற்றது. சீனாவின் மூலம் பிரபலமான சீகோங் எனப்படும் ஆன்மீக பயிற்சியின் தன்மை இதில் தெளிவாக, எளிமையாக விளக்கப் பட்டுள்ளது.
ஃபாலுன் கோங் பயிற்சியின் முக்கிய அங்கமான ஜுவான் ஃபாலுன் புத்தகத்தை படிக்கும் முன்னர், இதை படிப்பது நலம்.
புத்தகத்தை அங்குமிங்குமாக படிக்காமல் தொடர்ச்சியாக, ஒரே சீராக படித்து முடித்தால் விளைவுகள் சிறப்பாக இருக்கும்.